+
18 de de septiembre de, el año 2016 ஜப்பானில் விருது வழங்கும் விழாவில் ஏ. ஆர்.ரகுமானுக்கு தமிழில் வரவேற்பு அட்டைகளை வைக்கப்பட்டிருந்தது. ஜப்பான் நாட்டின் யோகோ போடியோ என்ற அமைப்பு இசை அமைப்பாளர் ஏ. ஆர்.ரகுமானுக்கு 'புகுவோகா' விருதை வழங்குவதாக அறிவித்தது. இசைத் துறையில் சிறந்து விளங்குவதால் அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை பெறுவதற்காக ஏ. ஆர்.ரகுமான் சமீபத்தில் ஜப்பான் சென்றார். அப்போது விருது வழங்கும் விழா நடந்த இடத்தில் அவரை இளைஞர்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது ஒரு மாணவி தமிழில் எழுதப்பட்ட வரவேற்பு அட்டைகளை வைத்திருந்தார். அதில் 'ரகுமான் அவர்களே வருக வருக'. 'எல்லாப்புகழும் இறைவனுக்கே' என்ற வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன. ஏ. ஆர்.ரகுமான் இந்த புகைப்படத்தை அவரது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். Escrito por Thurai y middot; Archivado சினிமா 18 de de septiembre de, el año 2016 சமந்தா கோலிவுட்டில் தனக்கு படங்கள் கிடைக்கவில்லை என்று மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம். இந்த வருடத்தில் 'தெறி', '24' என மிகப்பெரிய வெற்றிப்படங்களில் நடித்தவர் சமந்தா. அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து ஒப்பந்தமானவர் தற்போது எந்த படங்களுமே ஒப்புக்கொள்ளாமல் மவுனம் காத்து வருகிறார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை சமந்தா திருமணம் செய்துகொள்ளப்போவதாக செய்திகள் ஒரு பக்கம் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதனாலேயே தொடர்ந்து படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் சமந்தா ஒதுங்கியே இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், சமந்தாவோ, கோலிவுட்டில் தனக்கு ஏற்ற கதாபாத்திரம் கிடைக்காததாலேயே எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. எனக்கு நிறைய படங்களில் நடிக்கவேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால், எனக்கு ஏற்ற மாதிரியான கதை அமையவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ளார். சமந்தா, இப்போதைக்கு தனது கைவசம் சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் மட்டுமே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு படவுலகிலும் இந்த வருடத்தில் மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்த சமந்தா, அங்கேயும் எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளாமலே இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Escrito por Thurai y middot; Archivado சினிமா 18 de de septiembre de, el año 2016 கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'காஷ்மோரா' படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. கார்த்தி-நயன்தாரா நடிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட படம் 'காஷ்மோரா'. கார்த்தி படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், இப்படம் சரித்திர கால பின்னணியில் உருவாகியிருப்பது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்நிலையில், வருகிற செப்டம்பர் 21-ந் தேதி இப்படத்தின் ஆடியோவை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு அமைத்திருக்கிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. Escrito por Thurai y middot; Archivado சினிமா 18 de de septiembre de, el año 2016 ரேஷ்மி மேனனை விவகாரத்து செய்துவிட்டதாக வெளிவந்த செய்திக்கு பாபி சிம்ஹா விளக்கம் அளித்துள்ளார். கோலிவுட்டில் தற்போது விவாகரத்து சீசன் போலும். அமலாபால் தனது காதல் கணவர் ஏ. எல்.விஜய்யை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களது விவாகரத்து தற்போது கோர்ட் படியேறி இருக்கிறது. லிசி - பிரியதர்ஷன் விவாகரத்து விவாகரம் நீண்ட நாட்களாக நடைபெற்று தற்போது முடிவுக்கு வந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா தனது கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். விரைவில் விவாகரத்து செய்யப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படி தொடர்ந்து கோலிவுட்டில் அடுத்தடுத்து விவாகரத்து சம்பவங்கள் நடைபெற்று வருகிற நிலையில், சமீபத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட பாபி சிம்ஹாவும் - ரேஷ்மி மேனனும் பிரிந்துவிட்டதாகவும், விரைவில் விவாகரத்து செய்யப்போவதாகவும் செய்தி பரவியது. இந்த செய்தி கோலிவுட்டில் தீயாய் பரவிக்கொண்டிருக்க, இதை அறிந்ததும் சுதாரித்துக் கொண்ட பாபி சிம்ஹா உடனடியாக தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், வதந்தி குறித்து நான் இங்கு எதுவும் கருத்து கூற விரும்பவில்லை. எங்களைப் பற்றிய வெளிவந்த செய்திகளை நினைத்து கவலைப்பட்டு எங்களுக்கு போன் செய்பவர்களுக்கு நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் சந்தோஷமாக உள்ளோம். நாங்கள் பிரிப்பது பீட்சாவை மட்டும்தான் என்று குறிப்பிட்டுள்ளார். Escrito por Thurai y middot; Archivado சினிமா 17 de de septiembre de, el año 2016 விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியான செய்தி உண்மைதான் என செளந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ரஜினியின் 2-வது மகள் சவுந்தர்யா. இவர் 'கோவா' படத்தை தயாரித்தார். சரித்திர பின்னணியுடன் உருவான ரஜினியின் அனிமேஷன் படமான 'கோச்சடையான்' படத்தை இயக்கினார். சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில் சவுந்தர்யாவும், அஸ்வின் ராம்குமாரும் தற்போது பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. திருமணமாகி 6 ஆண்டுகளான நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியான செய்தி உண்மைதான் என செளந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள செளந்தர்யா ரஜினிகாந்த், தனது திருமண வாழ்வு குறித்து வெளியான செய்தி உண்மைதான் என்று கூறியுள்ளார். தாங்கள் இருவரும் கடந்த ஓராண்டிற்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்து பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது சொந்த வாழ்க்கை குறித்த விவாதங்களை தவிர்க்குமாறும் செளந்தர்யா ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். Escrito por Thurai y middot; Archivado சினிமா 17 de de septiembre de, el año 2016 மனதார காதலித்து பரிபூரண சம்மதத்துடன் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக நடிகை சாட்னா டைட்டஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். டைரக்டர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாட்னா டைட்டஸ். தமிழ், தெலுங்கில் வெளியான இந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்த பட வினியோக நிறுவனத்தின் பங்குதாரர் கார்த்திக். இவர் 'பிச்சைக்காரன்' பட விளம்பரம் மற்றும் அறிமுகவிழா தொடர்பாக நடிகை சாட்னா டைட்டசை சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் அரும்பியது. பின்னர் அடிக்கடி இருவரும் சந்தித்துக் கொண்டனர். இதன் மூலம் காதலை வளர்த்துக் கொண்ட சாட்னா டைட்டஸ் - கார்த்திக் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சாட்னா டைட்டஸ் - கார்த்திக் இருவரும் சமீபத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இது பற்றி கூறிய கார்த்திக் "இரண்டு பேரின் பெற்றோர் சம்மதத்துடன் தான் எங்கள் பதிவு திருமணம் நடந்தது" என்று தெரிவித்து இருந்தார். ஆனால் சாட்னா டைட்டஸ் தாயார் மாயா இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். "என் மகள் சாட்னாவை கார்த்திக் மூளை சலவை செய்து எங்களிடம் இருந்து பிரித்து விட்டார். சில படங்களில் நடிக்க எனது மகள் வாங்கிய அட்வான்சையும் திருப்பிக் கொடுக்கச் செய்து இனி நடிக்க கூடாது என்று தடுத்து வைத்திருக்கிறார். என் மகளிடம் போனில் கூட பேச முடியாமல் செய்து விட்டார். பதிவு திருமணம் செய்ததாக சொல்வது பொய். என் மகளை அவரிடம் இருந்து மீட்பேன் "என்று கூறி இருந்தார். இந்த நிலையில் சாட்னா டைட்டஸ், அவரது காதல் கணவர் கார்த்திக் இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: - அன்புடையீர் வணக்கம். கார்த்திக், சாட்னா டைட்டஸ் ஆகிய நாங்கள் இருவரும் மனதார காதலித்தோம். இருவரின் பரிபூரண சம்மதத்துடன் பதிவு திருமணம் செய்து கொண்டோம். வரும் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் எங்களுடைய இரு குடும்பங்கள், சுற்றம், நட்புகள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆதரவுடன் பிரமாண்டமான முறையில் எங்கள் திருமணம் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். என்றென்றும் உங்கள் அன்பையும், ஆதரவையும், அரவணைப்பையும் கோரும் கார்த்திக், சாட்னா டைட்டஸ். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இருவரும் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். Escrito por Thurai y middot; Archivado சினிமா
No comments:
Post a Comment